Posts

Showing posts from July, 2024

கோவை வெண்பா

கோவை வெண்பா   அன்பும் அமைதியும் பண்பும்கைக் கொண்டுநல் முன்புடன் வாழும் இனியவன் – வன்கா டுலவும் விலங்கினை நேசிக்கும் பாசம் நிலவும் உயர்வுக்கு வித்து. (1) அன்பு மலரே அருமை மலரே வந்தேன் தினமும் மலர்ந்தேன் மனமெல்லாம் பாடித் துதித்தேன் மலரேயென் நெஞ்சகம் நாடிச் சிறந்திடு இன்று. (2) மறைத்தாலா தாழை மணங்குறையும் நீரில் கரைத்தாலா தங்கம் கரையும் – செம்பில் இறைத்தாலா வற்றிடும் ஏழுகடல், நெஞ்சில் மறையாது காதல் மலர். (3) சிரித்த முகமும் சிதையா மனமும் கரித்த பிறகும் வசையா – தரித்த வழுவும் பொறுமை யுடனேற் பதுதான் அழுக்காறு கொள்ளா அகம். (4) பகைவர் இழைத்த கொடுமை எதுவும் பகைமை நிறையா மனதில் சிறிதும் ஒழுக்கம் தவறி நடவா திருத்தல் அழுக்காறு கொள்ளா அகம். (5) பெற்றோர் மதியா பிறன்மனை நாடி கற்றோர் வழியும் நடவாது – குற்றம் உடலுடன்  சேர்ந்ததென வாழ்பவ னுக்கு இடமுண்டோ வீட்டில் இனி. (6) காலத்தில் காமத்தைக் கட்டுக்குள் வைக்காது காட்டாறு போல்நெஞ் சலைந்தால் – காலத்து நடக்கின்ற குற்றங்களைக் குன்றேற்றி னாலும் இடமுண்டோ வீட்டில் இனி. (7) உடற்கு உயிராம் உலகில் ஒருவன் கடற்குப் படகினைப் போல – மடந்தை அழைப்பை இழக்கும் மு...